கூகளின் குசும்பு
பொதுவாக பெரிய பன்னாட்டு நிறுவனங்களென்றால் பல விதிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள், ஏதையுமே கொஞ்சம் சீரியஸா எடுத்துக் கொள்வார்கள், விளையாட்டுத் தனமாய் இருக்கமாட்டார்கள் என்றெல்லாம் எண்ணுவீர்கள். ஆனால் இதுக்கெல்லாம் நேர்மாறு கூகள்தான். கூகள் போன்று நகைச்சுவை உணர்வுள்ள நிறுவனத்தை இதுவரை நான் பார்த்ததில்லை (அப்படியொரு நிறுவனத்தை உங்கள் யாருக்காவது தெரிந்தால் மறுமொழியில் சொல்லுங்களேன்). சும்மா சொன்னா மட்டும் போதுமா உதாரணம் எதும் இல்லையான்னு நீங்க சொல்றது கேட்குது. இதோ சில எடுத்துக்காட்டுகள்.
1. நிலவில் ஆராய்ச்சிக் கூடம்
ஜூலை 20, 1969ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்தார். இந்த வரலாற்றுச் சம்பவம் நடந்து முப்பதியாறு ஆண்டுகள் ஆனதை நினவு கூறும் வகையில், ஜூலை 2005இல் கூகுள் தனது கூகள் நிலவு சேவையை வெளியிட்டது. இதோடு நிற்காமல் தாங்கள் நிலவில் ஆராய்ச்சி நிலையத்தை துவங்க இருப்பதாகவும், அங்கு வேலை செய்ய ஆட்கள் தேவயென்றும் தன் சொந்த இணையப் பக்கத்திலேயே விளம்பரம் செய்தது. அந்த விளம்பரத்தைப் படித்து பாருங்கள் மிகவும் சுவரஸ்யமாகயும் நகைச்சுவையாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும். சும்மா காமெடிக்காக மட்டும் எழுதாம நல்லா சிந்திச்சு எழுதியிருக்காங்க.
2. புறாக்களின் தரவரிசைப் பட்டியல்
கூகளின் தேடல் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்று விளக்கம் தந்தார்கள். இதுவும் அவர்களின் காமெடிதான். என்ன புரியலையா? உலக இணைய வலையின் கன்னிப் பருவத்தில் ஒரு சில நல்ல தேடல் இயந்திரங்களே இருந்தன. அப்போது ஸ்டான்ஃபொர்ட் பல்கலைகழகத்தில் லாரி பேஜும், ஸேர்கே ப்ரினும் முனைவர் ஆவதற்கு ஆராய்ந்து கொண்டுருந்தார்கள். அவர்கள் கண்டுபிடித்து என்னவென்றால் இணையத்தில் ஒரு விடயத்தைப் பற்றி ஒரு பக்கம் இருந்தால், அந்த விடயத்திற்குரிய பல சொற்களைக் கொண்டு மற்ற இணையப் பக்கங்கள் அந்த விடயமிருக்கும் பக்கத்திற்கு இணைப்புகள் தரும். அவர்களின் ஆராய்ச்சியில் உருவானதுதான் கூகள். அவர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததுதான் பக்கத் தரவரிசைத்(page rank) தொழில்நுட்பம். இணையம் எவ்வளவு பெரியது! அதில் உள்ள இணையப் பக்கங்கள் அனைத்தையும் பகுத்தாய்ந்து அவைபற்றிய குறிச்சொற்களை சேமிப்பதற்கு அதிகளாவிய கணிக்கும் திறனுள்ள கணினிகளைத்தானே(supercomputers) பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த அருங்காரியத்தை சாதாரண கணினிகளை குழுக்களிட்டு (PC Clusters) கூகள் செய்து முடிக்கிறது. இதையே முன்குறிப்பிட்ட விளக்கப் பக்கத்தில் "புறாக் கூட்டம்" (pigeon cluster) என்று நக்லாய் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த இரண்டு சம்பவங்களும் பொதுவாக எல்லொருக்கும் தெரிந்தவை. இப்படி பகிரங்கமாகச் சொல்லாமல் என்னென்ன செய்திருப்பார்கள் கூகள்காரர்கள்? இன்று அருணின் பதிவில் கூகளின் இன்னொரு நக்கலைப் பத்தி எழுதியிருந்தார் (அந்த பதிவின் உந்துதலால் வந்ததுதான் இந்தப் பதிவு).
கூகள் மப்ஸ் மூலம் உலகின் வரைபடங்களைப் பார்க்கலாம். பார்பதோடு மட்டுமின்றி பல நாடுகளில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும் வழியையும் கணிக்கலாம். இது துவங்கும் இடமும் முடியும் இடமும் வேவ்வேறு நாடுகளில் இருந்தாலும் வேலை செய்யும். அப்படி நியூ யோர்கிலிருந்து லண்டன் வருவத்திற்கான வழியைத் தேடினால் கூகள் மப்ஸ் காட்டும் வழி இதோ:அப்படித் தப்பா ஒன்னும் தெரியலையில்லையா? ஆனா இடதுபுறமிருக்கும் வழிகாட்டும் குறிப்புகளைப் பார்த்தீர்களா?
இருபத்திமூன்றாவது குறிப்பில் "அட்லான்டிக் கடலை நிச்சலடித்துக் கடக்கவும்" என்று வழிகாட்டி இருக்கிறார்கள். இது நக்கல்தானே :)
வேலை செய்வதற்கு கூகள் சிறந்த நிறுவனம். பிற்காலத்தில் அங்கு வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் ...