உபுண்டு 8.04 - ஹார்டி ஹெரான் (சிக்கல் - 2)

முந்தைய இடுகையில் சொன்னது போல், உபுண்டு ஹெரானுக்கு என் கணினியை மாற்றினேன். இதில் பல புதிய வசதிகள் உள்ளன. இவற்றைப்பற்றி ஏற்கனவே மு.மயூரனும் வடுவூர் குமாரும் எழுதியுள்ளனர். நான் காத்துக் கிடந்த புதிய மென்பொருள் ஃபயர்ஃபாக்ஸ் 3, ஹெரானுக்கு மாறியதால் கிடைத்தது. ஆனால் தமிழ் இணைய தளங்கள் எதுவும் சரியாகவே தெரியவில்லை.

முதலில் ஃபயர்ஃபாக்ஸ் 3இல் தான் ஏதோ பிரச்சினை என்று எண்ணினேன். ஆனால் ஜிஎடிட்டிலும் இதே பிரச்சினைதான். பின்புதான் ஏதோ நினைப்பில் System > Preferences > Appearanceஐ தேர்வு செய்தேன். பின் தோன்றும் சாளரத்தில், Fonts கீற்றில் Details விசையை அழுத்தினேன்.


Font Rendering Details சாளரத்தில் Hinting தலைப்புக்கு கீழ் உள்ள தெரிவுகளை ஒவ்வொன்றாக மாற்றி பார்த்தேன். ஃபயர்ஃபாக்ஸ் போன்ற, சில நிரல்களில் மீளத்திறக்காமல் இம்மாற்றங்கள் தெரியாது. எனவே ஜிஎடிட் கொண்டு சோதித்துப் பார்த்தேன்.

வேவ்வேறு Smoothing மற்றும் Hinting தெரிவுகளை செய்து பார்த்தேன். முடிவு இதோ:
  1. Smoothing = None; Hinting = None

  2. Smoothing = Subpixel; Hinting = None

  3. Smoothing = Subpixel; Hinting = Slight

  4. Smoothing = Subpixel; Hinting = Medium

  5. Smoothing = Subpixel; Hinting = Full

Smoothing = Subpixel; Hinting = Slight, தமிழ் எழுத்துகளை நன்றாக காட்டுகின்றது. உங்களின் கணினித்திரை LCD அல்லாது CRT ஆக இருந்தால் உங்களுக்கு வேறொரு Smoothing/Hinting தெரிவு உகந்ததாக இருக்கலாம். அப்படி இருந்தால் தயவு செய்து மறுமொழியில் தெரிவியுங்கள்.

இதெல்லாத்தையும் பின்வரும் ஒரே கட்டளையிலும் செய்யும் ;-)
gconftool --type string --set /desktop/gnome/font_rendering/hinting "slight"

9 மறுமொழிகள்:

நிமல்/NiMaL சொல்வது:

மிகவும் பயனுள்ளது. தகவலுக்கு நன்றி.

வடுவூர் குமார் சொல்வது:

/desktop/gnome/font_rendering/hinting "slight -- இவ்வளவு தானா? ஏதோ எழுத்து மறைந்து கிடப்பதாக தெரிகிறது.

து. சாரங்கன் / Saru சொல்வது:

நன்றி நிமல்.

குமார், குழப்பத்துக்கு மன்னிக்கவும். HTML PRE tagஆல் வந்த வினை. வீட்டில் பெரிய திரை பயன்படுத்துவதால் இதைக் கவனிக்கவில்லை. இப்பொழுது CODE tag கொண்டு சரி செய்துள்ளேன்.

சயந்தன் சொல்வது:

உபயோகித்தேன். நன்றி

திவா சொல்வது:

நன்றி சாரங்கன். தெளிவாகி விட்டது.

K. Sethu | கா. சேது சொல்வது:

நன்றி சாரங்கன். நல்ல தீர்வு. சற்று முன் உபுண்டு தமிழாக்க குழுமத்துக்கும் மற்றும் freetamilcomputing (FTC) குழுமத்துக்கும் இதைப்பற்றி மடல் இட்டுள்ளேன். வேறு சில பிரச்சினைகளைப்பற்றி அதில் குறிப்பிட்டுள்ளேன்.

தங்களது இடுகையில்:

//Smoothing = Subpixel; Hinting = Medium, தமிழ் எழுத்துகளை நன்றாக காட்டுகின்றது//

என்பதில் Hinting = Slight என்றிருந்திருக்க வேண்டும் அல்லவா?

~சேது

வடுவூர் குமார் சொல்வது:

சாரங்கன், என் பிரச்சனை தீரவில்லை.
http://kumarlinux.blogspot.com/2008/05/blog-post.html

து. சாரங்கன் / Saru சொல்வது:

சேது, நீங்கள் சொல்வது சரி "Hinting=Slight" என்றுதான் இருந்திருக்க வேண்டும். வெட்டி ஒட்டும்போது தவறு செய்துவிட்டேன். இப்போது சரியாக உள்ளது. தீர்வை மடற்குழுவுக்கு அனுப்பியமைக்கு நன்றி.

குமார், எனது உலாவியில் தமிழ்மணத்துக்கு சென்று பார்த்தேன். நல்லாத்தன் தெரியுது. என் பதிவில சொன்னதுபோல, ஜிஎடிட்டில் எழுத்து நல்லா வந்தவுடன், ஃபயர்ஃபாக்ஸை மீள்துவக்கினீர்களா? (i.e. restart)

Ram Vibhakar சொல்வது:

மிக்க நன்றி .. தமிழ் மற்றுமின்றி அணைத்து fontகளும் தற்போது தெளிவாக தெரிகிறது ..

என்னைப் பற்றி

பெயர்:
துரைசிங்கம் சாரங்கன்
தொழில்:
தற்போது பல்கலைக் கழக மாணவன்
துணுக்கு:
இலங்கையில் பிறந்து,
இந்தியாவில் வளர்ந்து,
இங்கிலாந்தில் வாழும்,
ஒரு இ. தமிழன் ;-)

அண்மையில் கேட்ட பாடல்கள்

இணைப்புகள்

பார்வையாளர்கள்