ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்
நாலு வருசம் போனதே தெரியாது. இப்ப நான் ஒரு "மென்பொருள் பொறியில் குரு" (Master of Software Engineering என்கிறத தமிழ் விக்சனரி மூலமா மொழிபெயர்தேன் ;-). முதல் வகுப்புல வேற பாஸ் பண்ணிட்டெனா அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே சந்தோஷம். உடனே உற்றார் உறவினர் எல்லாத்துக்கும் ஃபொன்ல தெரிவிச்சி, ஒவ்வொருத்தரும் வாழ்த்து சொல்லி போதும் போதும்னு ஆயிடுச்சு. தம்பிக்கு ஒரு பக்கம் சந்தோஷமும் இன்னொரு பக்கம் "நாமாளும் இப்ப நல்ல டிகிரி வாங்கனுமே"ன்னு கவலை. ஒரு விதத்தில அண்ணனா பிறந்தது நல்லதுதான் (He has to exceed or atleast meet the standards I set).
ரொம்ப நாளா ஒரு பதிவும் போடல. நிறைய விசயங்கள் நடந்திருக்கு. இங்கிலாந்தில் ஒரே மழையும் வெள்ளமும். புதனன்று கொர்டன் பிரவுன் புதிய பிரதமரா பதிவியெற்றார். இன்று, லண்டனில் வெடிக்கவிருந்த இரண்டு கார் குண்டுகளை போலிஸார் செயலிழக்கச் செய்தனர். ஜூலை 1ஆம் தேதியில் இருந்து, பொதுவான காற்றோட்டம் குறைந்த இடங்களில் (அலுவலகங்கள், அறைகள், குடியகங்கள் [pubs = ஒயின் ஷொப்] போன்றவற்றில்) புகைப் பிடிக்கத் தடை விதிக்கும் சட்டம் அமூல்படுத்தப்படவுள்ளது.
இனிமே கொஞ்சம் ரெஸ்ட், அதுக்கப்புறம் வேலை தொடங்கிட்ட நாயா பேயா அலைய வேண்டியதுதான் ( 8AM - 6PM வேலை, 3 மணி நேரம் போயிட்டு வர). மொத்ததில் மொக்கை பதிவை விட ஒரு துளி மேலான பதிவு இது :)
இப்படிக்கு,
சாரு
3 மறுமொழிகள்:
வாழ்த்துக்கள்.
குருவானதற்கு வாழ்த்துக்கள் :)
குடியகம் நல்ல சொல் :)
புகை தடை சட்டத்தையும் இங்க கொண்டு வர நினைச்சுக்கிட்டு இருக்காங்க..
ஆமா இ. தமிழன்ல இருக்க இ-க்கு விரிவு என்ன? இணையம், இங்கிலாந்து, e-tamilan, இல்ல..:)
நன்றி வ.குமார் & ரவி.
ரவி, இ.தமிழனில் உள்ள இ-க்கு விரிவை வலது பக்கத்தில் உள்ள என்னைப் பற்றிய துணுக்கில் இருந்து கண்டு பிடித்திருக்கலாமே?
இலங்கையில் பிறந்து, (இலங்கைத் தமிழன்)
இந்தியாவில் வளர்ந்து, (இந்தியத் தமிழன்)
இங்கிலாந்தில் வாழும், (இங்கிலாந்துத் தமிழன்)
ஒரு இ. தமிழன் ;-)
நிச்சயமாக ஈ-டமிலன் இல்லை. ஆனா நீங்க சொன்ன e-thamizhan பெயரும் நல்லாருக்கு. அதையும் சேர்த்துக்க வேண்டியதுதான், அதான் இப்ப குரு ஆயிட்டொம்ல :-)
உங்கள் கருத்தைத் தெரிவிக்க