என் முதல் தமிழ் வலைப்பதிப்பு

நான் 2005இல் எனது முதல் வலைப்பதிவை தொடங்கினேன். தொடங்கியதன் காரணம்: "வலைப் பதிவுகள்" பற்றித் தொலைக்காட்சியிலும், இணையதளங்களிலும், எனது கல்லூரியிலும் ஒரே பேச்சு. முதன் முதலில் என்னைப் பற்றியும், நான் வலையில் கண்ட நகைச்சுவையான பக்கங்கள் பற்றியும் எழுதினேன். எனக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்கிய பின்னர், என்ன சுவாரஸ்யமாக இருந்தாலும் எழுத்தினேன்.

வீட்டில் உள்ளவரை தினமும் தமிழில் உரையாட முடிந்தது. ஆனால் கல்லூரிக்கு வந்தபின், எங்கு சென்றாலும் ஆங்கிலம். பேசினால் ஆங்கிலம், படித்தால் ஆங்கிலம், எழுதினால் ஆங்கிலம், ஆங்கிலம், ஆங்கிலம், ஆங்கிலம்!!! தமிழ் மறந்துவிடுமோ என பயம் வந்துவிட்டது. எனவே இந்த தமிழ் வலைப் பதிப்பை தொடங்கியுள்ளேன். இனி வாரத்திற்கு ஒரு முறையாவது இங்கு எழுதவெண்டும் என்று ஆசை. காலப்போக்கில் என்ன நடக்குதென்று பார்க்கலாம் :)

பின்குறிப்பு: தமிழில் நீண்டநாள் எழுதாதல், சில எழுத்துப்பிழைகளோ இலக்கணப் பிழைகளோ இருக்கலாம். அப்படி இருப்பின், தயவு செய்து என்னைத் திருத்தவும்.

4 மறுமொழிகள்:

கானா பிரபா சொல்வது:

வாருங்கள், எங்கள் கூட்டணியில் ஐக்கியமாகுங்கள்

து. சாரங்கன் / Saru சொல்வது:

நன்றி பிரபா.

உங்கள் நண்பன்(சரா) சொல்வது:

வாருங்கள் திரு.சாரங்கன்,
நல்ல பல பயனுள்ள பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்!

பின்னூட்டங்கள் பற்றிக் கவலைப்படாதீர்கள்! தொடர்ந்து எழுதுங்கள் நல்ல வரவேற்பு கிடைக்கும்!

அன்புடன்...
சரவணன்.

வடுவூர் குமார் சொல்வது:

எதைப் பற்றியும் எவரை பற்றியும் தமிழில் எழுத எனது முயற்சி ...
ஜாக்கிரதை.
எழுதுங்கள்,வாழ்த்துக்கள்.

என்னைப் பற்றி

பெயர்:
துரைசிங்கம் சாரங்கன்
தொழில்:
தற்போது பல்கலைக் கழக மாணவன்
துணுக்கு:
இலங்கையில் பிறந்து,
இந்தியாவில் வளர்ந்து,
இங்கிலாந்தில் வாழும்,
ஒரு இ. தமிழன் ;-)

அண்மையில் கேட்ட பாடல்கள்

இணைப்புகள்

பார்வையாளர்கள்